தமிழ்நாடு

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் நாளை ஆலோசனை

8th Mar 2021 10:19 AM

ADVERTISEMENT


சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டு இன்று தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக ஒதுக்கும் குறைவான தொகுதிகளை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் இணைந்து போட்டியிடலாமா? என்பது குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு பற்றியும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் குறித்து கட்சித் தலைமை வெளியிட்ட அறிவிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், நடைபெற்றவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி மாவட்ட கழக செயலாளர்கள் அவரச ஆலோனை கூட்டம் நாளை 09.03.2021 செவ்வாய்க்கிழமை, காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : election admk DMDK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT