தமிழ்நாடு

தெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்

DIN

தமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பாஜக காலூன்றிவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த  தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தை, இன்று முடிவுக்கு வந்தது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தொகுதி உடன்பாடு குறித்து ஏற்கனவே மார்க்சிஸ்ட் மத்தியக் குழு, மாநில குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுகவுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இன்று காலை மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி அமைந்து விடக் கூடாது என்ற கோட்பாட்டுடன் இந்த கூட்டணி உடன்பாடு அமைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இடதுசாரிக் கட்சிகள் அதிக பலத்தோடு சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் பேச்சுவார்த்தைத் தொடங்கியது.

பாஜகவையும் அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு இடதுசாரி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அதிகம் இடம்பெற வேண்டும் என்பதும் அவசியமாக இருந்தது.

எங்களைப் பொறுத்தவரை முன்பு நடந்த தேர்தல்களில் அதிக இடங்களில் போட்டியிட்டுவிட்டு, தற்போது  6 தொகுதிகள்  என்பது குறைவு என்றாலும் திமுக கூடுதலாக ஒதுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதே வேளையில் அதிமுக - பாஜகவை தோற்கடிக்க வேண்டிய அரசியல் சூழ்நிலையில் எந்த வொரு சிறு பிரச்னையும் இந்தக் கூட்டணியில் ஏற்பட்டுவிடக் கூடாது, அது அந்தக் கூட்டணிக்கு எந்த வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்ற சூழ்நிலையில் திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தெரிந்தும் தெரியாமலும் கூட பாஜக தமிழகத்தில் காலூன்றிவிடக் கூடாது என்பதாலேயே 6 தொகுதிகளை ஏற்றுக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம் என்று கூறினார்.

மேலும், அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பது இயல்பு. அந்த அடிப்படையில் அதிக இடங்களில் போட்டியிடவே விரும்பினோம். ஆனால் கூட்டணி அமையும் போது, உடன்பாட்டை ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம் என்றே 6 தொகுதிகளை ஏற்றுக் கொண்டோம் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் என்ற உத்தேசப் பட்டியல் இன்னமும் கொடுக்கவில்லை என்றும் அவர் பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT