தமிழ்நாடு

ஈரோடு அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

DIN

ஈரோடு: ஈரோடு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை காவலர்கள் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த பள்ளியூத்து  கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் ( 52). தேங்காய்  உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு மோகன சங்கர் (29), தீனதயாளன் (27) என இரு மகன்கள் உள்ளனர். தீனதயாளனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனியார் சமையல்  எண்ணெய் நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம்  இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  இரவு தீனதயாளன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும்  திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தீனதயாளன் தந்தை சங்கரை கீழே தள்ளி நெஞ்சுப்பகுதியில் உதைத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் இறந்துப் போனார். இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அரச்சலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக  பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அரச்சலூர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீனதயாளனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அரச்சலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT