தமிழ்நாடு

திமுகவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை: கொ.ம.தே.க.

8th Mar 2021 07:34 PM

ADVERTISEMENT


திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது குறித்து கொ.ம.தே.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து ஈஸ்வரன் கூறியது:

"திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவோடு எங்களது கட்சியின் குழு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. எங்களது கட்சியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

ADVERTISEMENT

இரண்டு தரப்பு நிலைப்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதித்த பிறகு அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று முடிவெடுப்போம்.

தொகுதிகள் எண்ணிக்கை ஆட்சி மன்றக் குழுவில் விவாதிக்க வேண்டிய விஷயம். எனவே, அதுகுறித்து பின்னர் தெரிவிக்கப்படும்" என்றார்.

Tags : election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT