தமிழ்நாடு

ஓய்வுபெற்ற ஆசிரியர் கொலை: மனநலம் பாதிக்கப்பட்ட மருமகள் கைது

8th Mar 2021 09:37 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரை செங்கல்லால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மருமகளை காவலர்கள் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பச்சிக்கானபள்ளி கிராமத்தில் வசிப்பவர் வெங்கட்ராமன்(70). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மருமகள் நாகராணி (40). நாகராணி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக  தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று( 08/03/2021) அதிகாலை  3.45 மணிக்கு   தனது மாமனாரான வெங்கட்ராமன்,  வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கி கொண்டு இருந்தபோது, அங்குச் சென்ற  நாகராணி, அங்கிருந்த  செங்கல்லைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளார்.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகராணியை காவலர்கள் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மனநலம் பாதிக்க பாதிக்கப்பட்ட பெண், மாமனாரை கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Tags : murder
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT