தமிழ்நாடு

கெங்கவல்லியில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

8th Mar 2021 09:31 AM

ADVERTISEMENT


தம்மம்பட்டி: கெங்கவல்லியில் 50 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த  பசு மாடு இன்று காலை மீட்கப்பட்டது.

கெங்கவல்லி பேரூராட்சியில் பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான பசு மாடு, அருகே இருந்த 50 அடி ஆழ  கிணற்றில் திங்கள்கிழமை காலை 6.15 மணிக்கு தவறி விழுந்துவிட்டது.

தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில்  விரைந்துச் சென்று, கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை  ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
 

ADVERTISEMENT

Tags : salem news
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT