தமிழ்நாடு

சீர்காழி அருகே விவசாயத்தை அழித்து வரும் வெட்டுக்கிளிகள்: வேதனையில் விவசாயிகள்

DIN

காப்பான் படம் பாணியில் சீர்காழி அருகே விவசாயத்தை அழித்து வரும் வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர் .

மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அருகே கீரங்குடி கிராமத்தில் சம்பா நெற்பயிர்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரப்பட்டுள்ளது. கடந்த புயல் மழையால் கீரங்குடி கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் உடைப்பால் கிராமம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி அழிந்த நிலையில்  சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பாதிப்பிலிருந்து தப்பித்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வட மாநிலத்தில் வெட்டுகிளிகள் விவசாயத்தை அளித்தது போல கீரங்குடி கிராமத்தில் உள்ள நெற்பயிர்களில் லட்ச கணக்கில் வெட்டுகிளிகள் படையெடுத்து நெற்பயிர்களை கடித்து நாசம் செய்து வருவதால் நெல் மணிகள் அனைத்தும் பதறாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கொள்ளிடம் வேளாண்துறை உதவி இயக்குனருக்கு புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு மேலும் கடந்த மழையால் பாதித்த விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த நிவாரணம் இதுவரையில் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. 

தற்போது கீரங்குடி கிராமத்தில் வெட்டுகிளிகள் படையெடுத்து விவசாயத்தை முற்றிலும் அழித்து அட்டுழியம் செய்து வருகிறது. வெட்டுக்கிளியால் வயல் பகுதி முழுவதும் துருநாற்றம் வீசுகிறது. உடனே இந்த வெட்டுகிளிகளை அழிக்க அரசு நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற விவசாயிகள் கோரிகை விடுத்துள்ளனர் .

மேலும் வெட்டுகிளிகள் அடுத்தடுத்து கிரமாத்திற்கு பரவாமல் தடுக்கவும் அடுத்த விவசாயமான பருத்தி, உளூந்து, பயிர்களை பாதிக்காத வகையில் வெட்டுக்கிளியை முற்றிலும் அழிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT