தமிழ்நாடு

நெல்லை வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

DIN

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. மொத்தம் 1924 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 தொகுதிகளுக்குமான வாக்குஎண்ணும் மையமாக திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. 

இம்மையத்தை திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார். ஒவ்வொரு தொகுதியின் வாக்குகள் எண்ணும் வளாகம், கட்டடத்தில் உள்ள வழிப்பாதை விவரங்கள், அலுவலர்கள் மற்றும் கட்சி முகவர்கள் அமர தேவையான இடவசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். வாக்குஎண்ணும் மையத்தில் உள்ள கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளைக் கூடுதலாகச் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், மாநகர காவல் ஆணையர் அன்பு, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சார் ஆட்சியர்கள் பிரதீக்தயாள், சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்குஎண்ணும் மையத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்தார் ஆட்சியர் வே.விஷ்ணு. உடன், மாநகர காவல் ஆணையர் அன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT