தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டிக்கு வந்திறங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

DIN

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி கும்மிடிப்பூண்டி சட்டமன்றத்திற்கு உள்பட 405 வாக்குச் சாவடிகளில் தேர்தலன்று வாக்களிக்கத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தது.

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் 405 வாக்குச்சாவடிகளில் தேர்தலன்று வாக்களிக்கப் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் 3 லாரிகளில் வந்தது.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் பாலகுரு தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் குமார், கும்மிடிப்பூண்டி தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுத் தனி அறையில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுரு அந்த அறைக்கு அதிமுக நகரச் செயலாளர் மு.க.சேகர், திமுக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் மணிபாலன், பாஜக நகர நிர்வாகி வேந்தன் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சீல் வைத்தார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை சுழற்சி முறையில் 24 மணி நேரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் 405 வாக்குச்சாவடி மையங்களில் 486 பேலட் யூனிட்டுகள், 486 கன்ட்ரோல் யூனிட்டுகள், 507 விவிபிஏடி இயந்திரம்  வந்துள்ளதாக நிகழ்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் பாலகுரு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT