தமிழ்நாடு

எடப்பாடி தொகுதி அனைத்து கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்

8th Mar 2021 06:11 PM

ADVERTISEMENT

 

எடப்பாடி சட்டமன்றத்தொகுதி அனைத்து கட்சியினர் பங்குகொண்ட ஆலோசனைக்கூட்டம், எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், எடப்பாடி தொகுதியில், 2021 சட்டமன்றத்தேர்தல், அமைதியான முறையில் நடைபெறவும், வாக்குப் பதிவு, பரப்புரை நிகழ்வு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட சமயங்களில், அரசியல் கட்சிகள் பின்பற்றிட வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.  கூட்டத்தில்  மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்கு குறித்தும், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் சின்னங்களை அகற்றுதல் குறித்தும், அரசு வாகனங்களின் பயன்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள் எழுப்பிய புகார்கள் குறித்து, ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கூட்டத்தில் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கம், 

ADVERTISEMENT

அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ள புகார்கள் குறித்து, விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தேர்தல் விதி முறை மீறல்கள் இருப்பின், அவை உடனடியாக சரிசெய்யப்படுவதுடன், உரிய நபர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய தேர்தல் நடத்தும் அலுவலர், வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தல் அமைதியான முறையிலும், தேர்தல் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, பாரபச்சமின்றி நடைபெறவும், அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளித்திடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தேர்தல் களத்தில் பணியாற்ற உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறைகள் பங்குகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் தேர்தல் நேரத்தில் அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டிய முக்கிய பணிகள் குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT