தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் நோய் கட்டுப்பாட்டு பகுதி

8th Mar 2021 10:33 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிப்பு மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

ஒரு தெருவில் 3 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டு  இருந்தால் அந்தத் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 1,373 தெருக்களில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

மொத்தமுள்ள 1,373 தெருக்களில் 1,269 தெருக்களில் ஒருவருக்கும் 74 தெருக்களில் 2 பேருக்கும் 20 தெருக்களில் 3 பேருக்கும் 10 தெருக்களில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பிப்ரவரி மாதத்தில் 1500 ஆக இருந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 1850 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
 

Tags : chennai update chennai coronavirus vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT