தமிழ்நாடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்

8th Mar 2021 10:48 AM

ADVERTISEMENT


சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை இன்று முடிவு செய்யப்பட்டு, 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த  தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தை, இன்று முடிவுக்கு வந்தது.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் இதுவரை 7 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவாா்த்தை தொடா்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில், இன்று தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இன்னமும் தமிழக வாழ்வுரிமை மற்றும் கொமதே கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். திமுக கட்சியிடம் தற்போது 180 தொகுதிகள் கைவசம் உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் என்ற உத்தேசப் பட்டியல் நாளை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : DMK stalin CPM
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT