தமிழ்நாடு

முகக்கவசம், சமூக இடைவெளியைக் கட்டாயமாக்க நுகர்வோர் அமைப்புக் கோரிக்கை

DIN

நன்னிலம்: பொதுமக்கள் முகக்கவசம் அணிவதற்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கும் தமிழக தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது கரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுத்திடும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதற்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கும், தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பின் தலைவர் ஈஎம்ஏரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது சம்பந்தமாக அவர் தமிழ் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தலைமைச் செயலாளருக்கும் திங்கள்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது, 

இந்தியாவில் தற்போது கரோனா தொற்று எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை மட்டும் 18,000 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், கர்நாடக மாநிலங்களுக்கு அடுத்து தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக மருத்துவ அறிக்கைத் தெரிவிக்கிறது. இதில் ஒரு சிலர் மரணமடைந்து விட்டனர். தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் தொற்று ஏற்பட்டு வருகிறது. காரைக்கால் பகுதியில் மூன்று பேருக்கும், காரைக்கால் அருகில் உள்ள அம்பகரத்தூர் பகுதியில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் போடுவதை மறந்து விட்டனர். யாருமே போடுவதாகத் தெரியவில்லை. அதேபோல சமூக இடைவெளி என்பது எங்குமே இல்லாத நிலை உள்ளது. சென்ற மாதத்தின் ஆரம்பத்தில், காவல்துறையினர் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்ததன் காரணமாக, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியில் வந்தனர். ஆனால் தற்போது கரோனா தொற்று பரவி வரும் நிலையில், தற்போது,  யாரும் முகக்கவசம் அணிவதோ, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதோ இல்லை. எனவே கரோனா தொற்று பாதிப்பை ஓரளவு குறைக்கும் வகையில்,  தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் ஆணையரும், தலைமைச் செயலாளரும் உடனடியாக ஆணை பிறப்பித்து, முன்புபோல அனைத்து பகுதிகளிலும், சோதனைச் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் தற்போது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அமைக்கப்பட்டுள்ளச் சோதனைச் சாவடி அலுவலர்களும், பறக்கும்படை அலுவலர்களும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுதலைப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பின் தலைவர் ஈஎம்ஏ ரஹீம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT