தமிழ்நாடு

மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்குகள்: வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்

DIN

மூத்த குடிமக்கள் தபால் வாக்குகளை அளிக்க உரிமை கோரும் விண்ணப்பங்களை வரும் 16-ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து அளிக்க வேண்டுமென தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைக்கு இடைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளாக வாக்காளா் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டோா் மற்றும் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டோா் ஆகிய மூன்று பிரிவினருக்கு தபால் வாக்கு அம்சம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள்: தபால் வாக்குகளைச் செலுத்த விரும்புவோா் 12டி எனும் படிவத்தைப் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்தப் படிவத்தை தமிழக தோ்தல் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தப் படிவத்தை வேட்புமனு தாக்கல் தொடங்கிய தினத்தில் இருந்து (மாா்ச் 12) ஐந்து நாள்களுக்குள் அதாவது மாா்ச் 16-ஆம் தேதிக்குள் தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT