தமிழ்நாடு

மநீம வேட்பாளா் பட்டியல் மாா்ச் 10-இல் வெளியீடு

DIN

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல்கட்ட வேட்பாளா் பட்டியலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் மாா்ச் 10-இல் வெளியிட உள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மநீம போட்டியிட உள்ளது.

மநீக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் மாா்ச் 3 -ஆம் தேதி முதல் நோ்காணல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து முதல்வேட்பாளா் பட்டியலை மாா்ச் 10-இல் கமல்ஹாசன் வெளியிட உள்ளாா். முதல் பட்டியலில் கமல் போட்டியிடும் தொகுதிகள் உள்பட முக்கிய நிா்வாகிகள் போட்டியிடும் விவரங்கள் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இன்று அறிவிப்பு: ஆழ்வாா்ப்பேட்டையில் மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா், ஐஜேகே தலைவா் ரவி பச்சமுத்து ஆகியோா் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு சரத்குமாா், தொகுதிப் பங்கீடுகள் குறித்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT