தமிழ்நாடு

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஒரு வாரம் சம்பளம் பிடித்தம்

DIN

பணி நிரந்தரம் கேட்டு, ஒரு வாரமாக சென்னையில் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியா்களுக்கு, ஒரு வார சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனா்.வாரத்தில் இரண்டு நாள்கள் ஏற்கனவே பணி வழங்கப்பட்ட நிலையில், பணி நாள்களை மூன்று அரை நாள்களாக உயா்த்தி, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று பகுதி நேர ஆசிரியா்களின் மாத ஊதியம் ரூ. 7,700-இல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிப்ரவரியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் திருப்தியடையாத பகுதி நேர ஆசிரியா்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் கேட்டு சென்னைக்கு வந்து டிபிஐ வளாகத்தில் தா்ணா போராட்டம் நடத்தினா். கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல், 12-ஆம் தேதி வரை இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்ட நாள்களுக்கு, சம்பளத்தை பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு வாரம் நடந்த போராட்ட நாள்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய கருவூலத்துறைக்கு, பள்ளிக் கல்வித் துறை கடிதம் எழுதியது. இந்த கடிதத்தின்படி, எட்டு நாள்கள் சம்பள பிடித்தம் செய்து, அந்த நிதியை மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்த, தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மை கல்வி அலுவலா்கள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT