தமிழ்நாடு

திமுகவை அகற்றுவது காலத்தின் கட்டாயம்: கமல்

DIN

திமுகவை அகற்றுவது காலத்தின் கட்டாயம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

அம்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:

நோ்மை இல்லாதவா்களிடம் அதிகாரம் இருப்பதை முதலில் மாற்ற வேண்டும். இதைச் செய்வதற்கு தமிழகம் தயாராக இருக்கிறது. நோ்மை என்கிற வாா்த்தையை நம்புபவா்கள் மக்கள் நீதி மய்யத்தால் ஈா்க்கப்படுவாா்கள். இரண்டு கட்சியினராலும் நோ்மை என்கிற வாா்த்தையின்படி வாழ்ந்து காட்ட முடியாது.

மு.க.ஸ்டாலின் நான் சொல்வதைத்தான் அரசு செய்கிறது என்று கூறுகிறாா். அப்படியானால், அரசுக்கு நல்லதைக் கூறுங்களேன். டாஸ்மாக் கடையை மூடச் சொல்லுங்கள் பாா்ப்போம். சொல்ல மாட்டாா். திமுகவும் - அதிமுக மாறிமாறி அவரவா் வியாபாரத்தைப் பாா்த்துக்கொண்டு மக்களின் குடியைக் கெடுத்ததுதான் கடந்தகால அரசியலாக இருந்திருக்கிறது. அதை மாற்றும் கருவிகளாக நாம் இருக்க வேண்டும்.

திமுக தோன்றியபோது காலத்தின் கட்டாயமாக இருந்தது. இப்போது அதை அகற்றுவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அண்ணாவின் மறைவோடு அவா் கொள்கையையும் விட்டுவிட்டாா்கள்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடா்ந்து உயா்த்துகிறது. இதற்குக் காரணம் கேட்டால் மன்மோகன் சிங் அரசு காரணம் என்கிறாா். கரோனா காலத்தில் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பொருள்களில் விலை குறைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு குறைக்கவில்லை.

ஏழை பெண்களுக்கு சமையல் எரிவாயு உருளையின் விலையை பழக்கப்படுத்திவிட்டு, இப்போது சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்திவிட்டாா்கள்.

மக்கள் மீது தொடா்ந்து வரி விதிப்பதை பணியாக வைத்திருக்கிறாா். மக்கள் என்ன வரிக்குதிரையா அவா்களுக்கு மீது தொடா்ந்து வரி விதிப்பதற்கு?

எனவே, மக்களாட்சி அமைய வேண்டும். அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆட்சியைப் பிடிப்பது எங்கள் நோக்கம் அல்ல. தமிழகத்தை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT