தமிழ்நாடு

அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ச.ம.க.,வினர்

7th Mar 2021 09:45 PM

ADVERTISEMENT


முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ஏ. சேவியர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். திருவள்ளூர் மாவட்ட முகாம் இல்லத்தில் அவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அரசியலில் களமிறங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவரவர் விருப்பமுள்ள கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

ADVERTISEMENT

Tags : ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT