தமிழ்நாடு

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000: ஸ்டாலின் வாக்குறுதி

7th Mar 2021 07:57 PM

ADVERTISEMENT


திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெறும் விடியலுக்கான முழக்கம் பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு திமுக நடத்தும் முதல் பொதுக்கூட்டம் இது. விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை அறிவித்தார்.

ஸ்டாலினின் உறுதிமொழிகளாக வளமான ஏற்றத்தாழ்வற்ற தமிழகம், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உள்கட்டமைப்பு, சமூக நீதி என 7 துறைகளில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.

ADVERTISEMENT

வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு துறையின் கீழ் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூ. 4 லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கல்வி சுகாதாரத்துக்கு செலவிடப்படும் நிதி 3 மடங்கு அதிகரிக்கப்படும் என்றார்.

இதில் சமூக நீதியின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மனிதர்கள் மலம் அள்ளும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு முழுவதுமாக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
 

Tags : MK stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT