தமிழ்நாடு

தேர்தல் விழிப்புணர்வு: நாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டி

7th Mar 2021 11:13 AM

ADVERTISEMENT

நாமக்கல்: சட்டப்பேரவை தேர்தல், நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 100 சதவிகித வாக்குப்பதிவு செய்ய பொதுமக்களை வலியுறுத்தும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான்  போட்டியானது மாவட்ட நிர்வாகம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை இணைந்து நடத்தப்பட்டது.

இந்த மினி மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம், பெண்களுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு  நடத்தப்பட்டது.

ஆண்களுக்கான ஓட்டப்பந்தயம் லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி அணியாபுரம் அடுத்த பரளி பிரிவு ரோடு வரை 10 கிலோமீட்டர் தூரம்  சென்று மீண்டும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நிறைவு பெற்றது.

ADVERTISEMENT

பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் வேளாண்மை அறிவியல் மையம் வரை சென்று மீண்டும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்டது. 

லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய மினி மராத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர்,  மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

நாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்கும் ஆட்சியர் கா.மெகராஜ்.

இந்த நிகழ்சியில் நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டை குமார், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெ.முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க.அனந்தநாராயணன், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் அ.கார்த்திக் உள்பட கல்லூரியின் பேராசிரியர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான பிரிவில் ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி மாணவரும், பெண்களுக்கான பிரிவில் செல்வம் கல்லூரி மாணவியும் முதலிடம் பிடித்தனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT