தமிழ்நாடு

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்

7th Mar 2021 05:39 PM

ADVERTISEMENT


ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நாட்டின் பிற மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு மீண்டும் இ-பாஸ் நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது.

ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகியவை தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்து பிற மாநிலங்கள் வழியாக தமிழகம் வருவோரும் இ-பாஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியான பயணமாக 3 நாள்களுக்கும் குறைவாக தமிழகம் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT