தமிழ்நாடு

சமயபுரம் கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

7th Mar 2021 03:07 PM

ADVERTISEMENT

 

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அம்மனை தரிசித்து வழிபட்டார்.

விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுக-வின் சிறப்புப் பொதுக் கூட்டம், சிறுகனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால், விமானம் மூலம் திருச்சிக்கு பிற்பகல் வருகை தந்தார் துர்கா ஸ்டாலின்.

பின்னர், கார் மூலம் சமயபுரம் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டார்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின், பூக்கள் அடங்கிய தட்டுகள் மற்றும் மாலை அடங்கிய பூ தட்டுகளுடன் வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தார்.

Tags : Durga Stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT