தமிழ்நாடு

தொகுதி உடன்பாடு முழு திருப்தி: தினேஷ் குண்டுராவ்

7th Mar 2021 11:05 AM

ADVERTISEMENT


திமுக உடனான தொகுதிப் பங்கீடு முழு திருப்தியளிப்பதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்ற இறுதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியுடன், தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ''சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடனான தொகுதிப் பங்கீடு முழு திருப்தியளிக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் பெரிய வெற்றி பெறும்'' என்று கூறினார்.

ADVERTISEMENT

Tags : தினேஷ் குண்டுராவ் 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT