தமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் அமித் ஷா சாமி தரிசனம்

7th Mar 2021 11:25 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார்.

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை நாகா்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார்.

அங்கிருந்து காா் மூலம் சுசீந்திரம் வரும் அமித் ஷா, அங்குள்ள தாணுமாலயசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நாகா்கோவில் இந்துக் கல்லூரி அருகிலுள்ள நீலவிழி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு, தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறாா்.

பின்னர் சுசீந்திரத்தில் பாஜகவின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சியையும் அமித் ஷா தொடக்கி வைக்கிறார்.

Tags :  அமித் ஷா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT