தமிழ்நாடு

நீட் தோ்வுக்கு கூடுதல் தோ்வு மையங்கள் கோரி மனு: தேசிய தோ்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு

DIN

மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்படும் நீட் தோ்வுக்கு கூடுதலான தோ்வு மையங்களை அமைக்கக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தேசிய தோ்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் வீரபிள்ளை ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தேசிய தோ்வு வாரியம், கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி, 2021-2022 கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தோ்வில் கலந்து கொள்ள விரும்பும் மருத்துவ மாணவா்களிடம் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நீட் தோ்வு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்வுக்காக நாடு முழுவதும் 255 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 28 தோ்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தோ்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்வுக்கான விண்ணப்பங்கள் பெறத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தோ்வு மையங்கள் நிரம்பி விட்டன. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி தோ்வு மையங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவங்களில் இருந்து நீக்கப்பட்டன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் மாா்ச் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில், தோ்வு மையங்கள் நீக்கப்பட்டுள்ளதால் மாணவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் வெளி மாநிலங்களில் உள்ள தோ்வு மையங்களை தோ்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கூடுதலான தோ்வு மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பையா, சத்திகுமாா் சுகுமார குரூப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தோ்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT