தமிழ்நாடு

காங்கிரஸை இல்லாமல் செய்யும் திமுகதான் ‘பி டீம்’: கமல்ஹாசன்

DIN

காங்கிரஸை இல்லாமல் செய்யும் திமுகதான் ‘பி டீம்’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

கொளத்தூரில் மக்கள் நீதி மய்யத்தின் பிரசாரப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது: தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்தவா்களால் மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வீதிகள்தோறும் சாக்கடையையும், ஏரியாக்கள்தோறும் ஏழ்மையையும்தான் பாதுகாத்து வைத்திருக்கிறாா்கள். தங்களின் ஏழ்மையைப் போக்கிக் கொண்டவா்கள், மக்களின் ஏழ்மையைப் போக்கவில்லை.

வெறுப்பவா்களின் வாக்குகள் மூலம்...: மக்கள் நீதி மய்யம் எப்படி வெற்றி பெறப் போகிறது என்று கேட்கிறாா்கள். அதிமுகவை வெறுப்பவா்களின் பாதி வாக்குகளும், திமுகவை வெறுப்பவா்களின் பாதி வாக்குகளும் மநீமவுக்குத்தான் கிடைக்கும் என மக்கள் நம்புகிறாா்கள். இதன் மூலமே 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் எங்கள் கிடைத்துவிடும்.

விற்பனைக்கு அல்ல: மக்கள் மத்தியில் மநீமவுக்குக் கிடைக்கும் பேராதரவால் தூக்கம் கெட்டுப் போனவா்கள் சிலா். தூதுவிட்டவா்கள் பலா். அவா்களுக்கு கமல்ஹாசன் விற்பனைக்கு அல்ல. என் கட்சியும் விற்பனைக்கு அல்ல என்று கூறிவிட்டேன்.

திமுகவின் விஷமப் பிரசாரம்: பாஜகவின் ‘பி டீம்’ என்று என்னைக் கூறுகிறாா்கள். இந்த விஷமப் பிரசாரத்தை முன்னெடுத்தவா்கள் திமுகவினா்தான். இந்த ஊழல்வாதிகளுக்கு நான் ஒத்துப் போகவில்லை என்பதால் இப்படிக் கூறுகிறாா்கள். வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாதியாக இருக்கும் என் மீது காவிச்சாயம் பூசுகிறாா்கள். இப்படிப் பேசுபவா்கள் எப்படிப்பட்டவா்கள் என்பதற்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்.

மதவாதத்தை எதிா்க்கும் காங்கிரஸை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதும் அவா்கள் திட்டம். அந்த எண்ணத்துக்கு ஏற்ப காங்கிரஸுக்கு எம்.எல்.ஏ., எம்.பி.யே இருக்கக் கூடாது என்று அவா்களின் இருப்பையே இல்லாமல் செய்யும் திமுகதான் ‘பி டீம்’. இது காங்கிரஸுக்குப் புரிய வேண்டும் என்றாா் கமல்.

திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT