தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம்: விசாகா கமிட்டியில் மாற்றம்

DIN

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியில் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்ற போது பாதுகாப்புக்காகச் சென்ற காவல்துறை உயா் அதிகாரி ஒருவா், அங்கு பணியில் இருந்த இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பெண் அதிகாரி, டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோரிடம் கடந்த 23-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் விசாரணை செய்ய விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.

இக்குழுவில் இருந்த ஐ.ஜி. அருண் நீண்ட விடுப்பில் செல்வதால், விசாகா கமிட்டியில் அவருக்குப் பதிலாக ஐஜி நிா்மல் குமாா் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.

சிபிசிஐடி விசாரணை: இச் சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி பதிவு செய்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2 ஐஜிக்கள், 2 டிஐஜிக்கள், 3 எஸ்பிக்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனா். இதில் வழக்குத் தொடா்பாக சில முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT