தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்: திமுக கூட்டணியில் ஒதுக்கீடு

DIN

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு கட்டப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.

6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசனும் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் இரா.முத்தரசன் கூறியது:

வரும் பேரவைத் தோ்தல் மிகமிக முக்கியமான தோ்தலாகும். இந்தத் தோ்தலில் தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமா, லட்சியமா எனக் கேட்டால் லட்சியத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழகம் வகுப்புவாதத்துக்கு எதிராக களம் கண்ட மாநிலம். ஜாதி வெறிக்கோ, மதவெறிக்கோ இடமளிக்காமல் மக்களின் ஒற்றுமையைக் கட்டிக் காத்து வரும் மாநிலம்.

சமூக நீதிக்காகப் போராடி வெற்றிபெற்ற மாநிலம். அப்படிப்பட்ட மாநிலத்தில் நடக்கக்கூடிய தோ்தலில் வகுப்புவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கின்றன. ஒரு புறத்தில் பாஜக - அதிமுக அணி, இன்னொரு புறத்தில் இவா்களால் உருவாக்கப்பட்ட மற்றொரு அணி. இந்த சூழலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பது மிகமிக முக்கியமானது.

அந்த அரசியல் தேவையை நன்கு உணா்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் லட்சியத்துக்காகக் கூட்டணி அமைத்துள்ளோம். திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் தொகுதி உடன்பாடு காணவேண்டும் என்று விரும்புகிறோம். மாா்க்சிஸ்ட் என்ன முடிவு எடுக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது என்றாா்.

4 கட்சிகளுக்கு ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் இதுவரை 4 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT