தமிழ்நாடு

எந்தக் கட்சியும் பணம் கொடுக்க வீட்டுக்கு வரக் கூடாது என நினைப்பவர்களுக்கு ஒரு யோசனை

6th Mar 2021 02:38 PM

ADVERTISEMENT

 

உரிமைகள்.. உண்மையில் சொல்லப்போனால் பல உரிமைகளை மனித குலம் போராடித்தான் பெற்றிருக்கின்றன. அந்த உரிமையில் மிக முக்கியமான உரிமை வாக்குரிமை. உங்களுக்கு அப்படி ஒரு உரிமை இருக்கும்போது, அதை ஏன் நீங்கள் முறையாகப் பயன்படுத்தக் கூடாது. அந்த உரிமையை ஏன் பணத்துக்கு விற்க வேண்டும்.

ஆமாங்க..இதையே தான் நாங்களும் நினைக்கிறோம், எந்தக் கட்சியிடமும் பணம்பெற்றுக் கொண்டு வாக்களிக்க எங்களுக்கு விருப்பமேயில்லை. எங்கள் வீட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் நுழைவதை நாங்கள் விரும்பவில்லை என்று சொல்பவரா நீங்கள்?

அப்படியானால் வாருங்கள்.. உங்களுக்கு ஒரு உருப்படியான யோசனை சொல்கிறோம். இதை நாங்களே கண்டுபிடித்துவிடவில்லை.  மதுரையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எம். ஜான் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் வழக்கம்தான் இது.

ADVERTISEMENT

அவர் என்ன சொல்கிறார் என்றால், வாக்குக்கு பணம் கொடுக்க வரும் எந்தக் கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்கிறார்.

இதை ஒவ்வொரு அரசியல் கட்சிகளிடமும் போய் நேரில் சொல்லிவிட்டு வர முடியுமா என்ன? ஆனால் இப்படி ஒரு வழியைப் பின்பற்றினால் நமது வேலை எளிதாகும். அதாவது, "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல, நாங்கள் வாக்களிக்க பணம் தர முன்வரும் கட்சிக்கு எங்கள் வாக்கு இல்லை" என்ற வாசகம் அடங்கிய பலகையை தன் வீட்டு நுழைவாயிலில் மாட்டிவிட்டுள்ளார் ஜான்.

ஒவ்வொரு முறை தேர்தல் தொடங்கும்போதும், இந்த போர்டை அவர் தனது வீட்டு நுழைவாயிலில் மாட்டிவிட மறந்ததே இல்லை.

ஒரு அரசு ஊழியராக, எனக்கு பல முறை லஞ்சம் கொடுக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், எனது 33 ஆண்டு அரசு அரசுப் பணியில் ஒரு முறை கூட நான் லஞ்ம் பெற்றதில்லை. அதுபோலவே, வாக்களிக்கப் பணம் பெறுவதும் ஒரு குற்றம் என்பதை பொதுமக்கள் உணர  வேண்டும் என்கிறார் உரத்த குரலில்.
 

Tags : tn cm tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT