தமிழ்நாடு

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனச் சோதனை மேற்கொள்ள வேண்டும்: திருப்பூர் ஆட்சியர்

DIN

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனச் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, பல்லடம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் வாகனச்சோதனையினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவர் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முறைகேடுகளைத்தடுக்கும் வகையில் 24 பறக்கும்படை, 24 நிலை கண்காணிப்புக் குழு மற்றும் 16 விடியோ கண்காணிப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சோதனையின்போது வாகனங்களின் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். அதே வேளையில், வாகனச்சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றார்.

முன்னதாக, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காங்கயம்பாளையம் புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது, தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார், வட்டாட்சியர்கள் சுந்தரம் (திருப்பூர் தெற்கு), ரவிச்சந்திரன் (தாரபுரம்), திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர்கள் சுப்பிரமணி, கண்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT