தமிழ்நாடு

கண் இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான்:  கே.எஸ். அழகிரி விளக்கம்

6th Mar 2021 12:43 PM

ADVERTISEMENT


சென்னை: திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் எந்த வருத்தமும் இல்லை. கண் இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுகவில் வேட்பாளர் நேர்காணல் முடிந்த பிறகு திமுக -  காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, திமுக தரப்பில் இருந்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு அழைப்பு எதுவும் வரவில்லை. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிந்த பிறகு தொகுதிப் பங்கீடு குறித்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கண் கலங்கியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கண் என்று இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான். கண் இல்லை என்றால் கண்ணீர் வராது என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

ADVERTISEMENT

தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் வருத்தமா? என்று கேட்டதற்கு, வருத்தம் எதுவும் இல்லை என்று  கூறினார்.

தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் கால தாமதம் செய்யப்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதில் கால தாமதம் எதுவும் இல்லை. நேர்காணல் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.
 

Tags : ks alagiri congress dmk tn eleciton
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT