தமிழ்நாடு

பேச்சுவார்த்தையில் மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்க அதிமுக உறுதி: தேமுதிக

DIN


அதிமுகவுடனான பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இறங்கி வந்துள்ளதாக தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் பேச்சுவார்த்தையில் தொகுதி எண்ணிக்கைகளில் மட்டுமே இழுபறி நீடித்து வருவதாகவும், ஒரு மாநிலங்களவை இடம் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிமுக, தேமுதிக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

"கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஒன்றும் இல்லை. எங்களுக்கிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதிகள் எண்ணிக்கையில் நாங்கள் சற்று இறங்கி வந்துள்ளோம். 40 தொகுதிகள் கேட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் 25 அல்லது அதற்கு மேலான தொகுதிகளாக எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டோம். இன்று 23 தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் இடம் என சற்று இறங்கி வந்துள்ளோம். இதில் மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்க உறுதியளித்துள்ளார்கள்.

இந்த எண்ணிக்கை குறித்து தலைவரிடம் கலந்துரையாடவுள்ளோம். அதன்பிறகு, நாளை அல்லது நாளை மறுநாள் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT