தமிழ்நாடு

இன்று மாலை மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம்

6th Mar 2021 01:05 PM

ADVERTISEMENT

சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதிகள் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் இன்று (மார்ச் 6) மாலை நடைபெறவுள்ளது.

திமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால், உயர்மட்டக் குழுவுடன் ஆலோசித்து மதிமுக முடிவு எடுக்கவுள்ளது.

பேச்சுவார்த்தையின்போது மதிமுக 10 தொகுதிகள் வரை கோரியிருந்த நிலையில், 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பேசி மதிமுக முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Tags : election mdmk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT