தமிழ்நாடு

பாமகவிற்கு 'மாம்பழம்' சின்னம்: தேர்தல் ஆணையம்

DIN


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 23 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது.

பாமக கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் மாம்பழம் சின்னத்தில் பாமக போட்டியிடுகிறது. 

தமிழகத்தில் 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. அந்தக் கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிலும் மாம்பழம் சின்னத்திலேயே பாமக போட்டியிட்டது.

இதனிடையே தற்போதைய சட்டப் பேரவை தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணியில் மாம்பழம் சின்னத்திலேயே பாமக போட்டியிடவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT