தமிழ்நாடு

பவானியில் தேர்தலில் வாக்களிக்க வெற்றிலை, பாக்குடன் அழைப்பிதழ்

6th Mar 2021 01:39 PM

ADVERTISEMENT

 

பவானியில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வெற்றிலை, பாக்குடன் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

பவானி வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் தேர்தல் துணை வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள புதிய பேருந்து நிலையம், அந்தியூர் மேட்டூர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் அழைப்பிதழை வழங்கினர்.

தேர்தலில் பங்கேற்க வினியோகிக்கப்படும் அழைப்பிதழ்.

வரும் ஏப்.6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தின் சட்டப் பேரவைத் தேர்தல் காலை நடைபெற உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தும் இத்தேர்தலில், வாக்காளர்கள் 100 சதம் வாக்கினைச் செலுத்தி, ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தும் வாக்களிக்க வர வேண்டும் என அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT