தமிழ்நாடு

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: மாலை 5 மணிக்கு வருமாறு மதிமுகவிற்கு அழைப்பு

6th Mar 2021 12:46 PM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று (மார்ச் 6) மாலை 5 மணிக்கு வருமாறு மதிமுகவிற்கு திமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

திமுக - மதிமுக இடையே ஏற்கெனவே 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் அதிருப்தியுடன் மதிமுக வெளியேறிய நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தையின்போது மதிமுக 10 தொகுதிகள் வரை கோரியிருந்த நிலையில், 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது.

ADVERTISEMENT

Tags : மதிமுக திமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT