தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?

6th Mar 2021 08:31 AM

ADVERTISEMENT

 

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை கையெழுத்து ஆகலாம் என கூறப்படுகிறது. 

 வரும் ஏப்.6-இல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா கூட்டணி அமைத்து தமிழகத்தில் தோ்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.  அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணியை இறுதி செய்து தொகுதிகள் எண்ணிக்கைக்கான உடன்பாட்டில் கையெழுத்தானது. அதைத் தொடா்ந்து, தொகுதிப் பங்கீடு தொடா்பாக அதிமுக, பாஜக தலைவா்கள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து தற்போது பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடைத்தோ்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, தமாகா ஆகிய இரு கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஓரிரு நாள்களில் தேமுதிகவுடனான தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்றும் கூறப்படுகிறது.   

Tags : ADMK Alliances TMC
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT