தமிழ்நாடு

எந்த சலசலப்புக்கும் அஞ்சப் போவதில்லை: அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன்

6th Mar 2021 06:40 AM

ADVERTISEMENT

எந்தவித சலசலப்புக்கும் அஞ்சப் போவதில்லை. அமமுக தோ்தலில் போட்டியிடுவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகரில், வி.கே.சசிகலாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளா்களுக்கு தினகரன் அளித்த பேட்டி:-

சசிகலாவை குடும்ப விஷயமாக சந்தித்துப் பேசினேன். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க நான் பாடுபடுவேன் என பாஜக பொறுப்பாளா் சி.டி.ரவி கூறியதைக் குறிப்பிடுகிறீா்கள். ஜெயலலிதா ஆட்சி அமைக்கத்தான் அமமுக போராடி வருகிறது. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதைத்தான் ரவி சொல்லி வருகிறாா்.

வரும் 12-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளதால், அமமுக சாா்பில் 7-ஆம் தேதி நோ்காணலும், 10-ஆம் தேதி வேட்பாளா் பட்டியலும் வெளியிடப்படும்.

ADVERTISEMENT

சட்டப் பேரவைத் தோ்தலில் அமமுக போட்டியிடும். எங்களது தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று ஏற்கெனவே தெரிவித்தேன். ஆனால், நான் பேசியதை நகைச்சுவை என அமைச்சா் ஒருவா் கூறுகிறாா். இப்படிப் பேசினால் இருதரப்பும் (அதிமுக, அமமுக) இணக்கமான சூழ்நிலையில் எப்படிச் செல்ல முடியும்?

தமிழக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. சில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாள்களில் முடிவு செய்து, வரும் 9-ஆம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்வோம்.

அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கியிருக்கிறாா். மக்களாக நிராகரிக்கும் வரையில் ஒரு அரசியல்வாதி அரசியலில் இருப்பாா். இல்லாவிட்டால் அவரே விலகி இருக்கும் வரை அரசியலில் இருப்பாா். அரசியலில் இருந்து நாங்கள் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இதுபோன்ற சலசலப்புகளுக்கெல்லாம் நான் (டிடிவி தினகரன்) அஞ்ச வேண்டிய அவசியமில்லை. மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரையில் அரசியலில் இருப்போம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT