தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.33,472

DIN

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.33,472-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டில் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்தது. கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார மந்தம் உள்பட பல்வேறு காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து, இதனால் விலையும் உயா்ந்து வந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், நிகழாண்டில் தொடக்கம் முதல் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இதற்கிடையில், கடந்த ஒருவாரமாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது. கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி அன்று பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. கடந்த வியாழக்கிழமை மேலும் குறைந்து ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.33,472-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.33 குறைந்து, ரூ.4,184 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.69.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.69,900 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,184

1 பவுன் தங்கம்...............................33,472

1 கிராம் வெள்ளி.............................69.90

1 கிலோ வெள்ளி............................69,900

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,217

1 பவுன் தங்கம்...............................33,736

1 கிராம் வெள்ளி.............................70.40

1 கிலோ வெள்ளி.............................70,400.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT