தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

DIN


சென்னை: சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக் கொண்டாா்.

சென்னையில் சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளா்கள், மருத்துவத் துறையினா், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களுக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஓமந்தூராா் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக் கொண்டாா். அதற்கான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது, சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் உடனிருந்தாா்.

ஏற்கெனவே துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

வைகோ, கே.எஸ். அழகிரி:

இதுபோல் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி ஆகியோரும் தனியாா் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT