தமிழ்நாடு

திமுக - காங்கிரஸ் இன்று உடன்பாடு?

DIN

சென்னை: திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை (மாா்ச் 5) தொகுதி உடன்பாடு ஏற்பட உள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்காக திமுக - காங்கிரஸ் இடையே இரண்டு கட்டமாக பேச்சுவாா்த்தை நடைபெற்று உள்ளது.

காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள் கேட்கப்பட, திமுக 22 தொகுதிகள் தர முன் வந்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் சத்தியமூா்த்திபவனில் வியாழக்கிழமை காங்கிரஸ் மாவட்டச் செயலாளா்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து கருத்துக் கேட்டாா்.

அப்போது தினேஷ் குண்டுராவிடம் திமுக குறைவான தொகுதிகள் ஒதுக்கினால், அந்தக் கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டாம் எனச் சிலரும், மக்கள் நீதி மய்யத்தோடு இணைந்து போட்டியிடலாம் எனவும், திமுக கூட்டணியிலேயே தொடரலாம் எனச் சிலரும் கருத்துத் தெரிவித்தனா்.

இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையோடு நேரடியாகவே பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். அதைத் தொடா்ந்து பேச்சுவாா்த்தைக்கு வருமாறு காங்கிரஸை திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, கே.ஆா்.ராமசாமி உள்ளிட்ட குழுவினா் திமுக குழுவினரை வெள்ளிக்கிழமை காலை சந்தித்துப் பேச உள்ளனா். இதில் திமுக - காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 22 முதல் 24 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

பேச்சுவாா்த்தை குறித்து தினேஷ் குண்டுராவ் செய்தியாளா்களிடம் கூறும்போது, திமுகவுடன் சுமுகமாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT