தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு: திமுக-இந்திய கம்யூ. மீண்டும் ஆலோசனை

DIN

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் திமுகவுடனான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக  ஏற்கெனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இதனையடுத்து இன்று (மார்ச் 5) 3வது முறையாக திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிபிஐக்கு 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சிபிஐ இரட்டை இலக்கு எண்ணில் தொகுதிகள் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT