தமிழ்நாடு

விருப்ப மனு தாக்கல் செய்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா

4th Mar 2021 01:22 PM

ADVERTISEMENT


சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று, தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பிரேமலதா விஜயகாந்த் தாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் விருப்ப மனுவில் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக சார்பில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பாளா் நோ்காணல் மாா்ச் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து பிப்ரவரி 25 முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான கால அவகாசம் மாா்ச் 5 வரை உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுவைப் பெற்று வருகிறது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT