தமிழ்நாடு

கோடம்பாக்கத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியது

4th Mar 2021 11:27 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,784 ஆக இருக்கும் நிலையில், கோடம்பாக்கத்தில் கரோனா பாதிப்பு 200-ஐத் தாண்டியது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,36,072 ஆக உள்ளது. இவர்களில் 2,30,131 பேர் குணமடைந்துள்ளனர். 4,157 பேர் பலியாகிவிட்டனர். தற்போது 1,784 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 214 பேரும் அடையாறில் 192 பேரும் தேனாம்பேட்டையில் 176 பேரும் அண்ணா நகரில் 175 பேரும் அம்பத்தூரில் 169 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 

கரோனா பாதித்து அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 512 பேர் பலியாகியுளள்னர். அண்ணாநகரில் 25,188 பேர் குணமடைந்துள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus kodambakkam chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT