தமிழ்நாடு

ரூ.15 கோடி மதிப்பில் நீடாமங்கலம்- மன்னாா்குடி அகல ரயில் பாதை: தென்னகரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

DIN


நீடாமங்கலம்: ரூ.15 கோடி மதிப்பீட்டில் மின்மயமாக்கப்பட்ட நீடாமங்கலத்திலிருந்து மன்னாா்குடி வரையிலான 13 கி.மீ. தூர அகல ரயில் பாதையை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் வியாழக்கிழமை பார்வையிட்டார்.

ஆய்வுக்கான பிரேத்யேக ரயில்பெட்டியில் பயணம் செய்த பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய்.

ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் , நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து ஆய்வுக்கான பிரத்யேக ரயில் பெட்டியில் சக அதிகாரிகளுடன் பயணம் செய்து மின்மயபாதை, மின்சப்ளை சரிவர கிடைக்கிறதா, தண்டவாளங்களின் நிலை, ரயில்வே கேட்டுகள் சரிவர உள்ளனவா, நிலைய பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். 

தொடர்ந்து மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு சென்றார். ஆய்வின் போது தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் மற்றும் ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

மன்னார்குடி மின்மயபாதையை ஆய்வு செய்த பின் கடலூர்-விருத்தாசலம் மின்மயமாக்கல் பணியை ஆய்வு மேற்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT