தமிழ்நாடு

கண்டெய்னர் லாரியில் ஜெயலலிதா புகைப்படத்துடன் ஸ்கூல் பேக்: தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை

4th Mar 2021 10:48 AM

ADVERTISEMENT


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஜெயலலிதா புகைப்படம் பொறிக்கப்பட்ட ஸ்கூல் பேக்குகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூரில் சாலையில் நீண்ட நேரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது லாரியில் பள்ளிக் கல்வி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கக் கூடிய ஜெயலலிதா புகைப்படம் பொறிக்கப்பட்ட பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து லாரி ஓட்டுநரிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT