தமிழ்நாடு

இட ஒதுக்கீடு விவகாரம்: விளாத்திகுளம் தொகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டனம்

4th Mar 2021 10:37 AM

ADVERTISEMENT



விளாத்திகுளம்: தமிழக அரசு அண்மையில் அறிவித்த இட ஒதுக்கீடு அறிவிப்பில் சமூக நீதி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விளாத்திகுளம் தொகுதியில் 50க்கும் மேற்பட்ட  கிராமங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தினர் கருப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்து   வருகின்றனர்.

 

கள்ளர், மறவர், அகமுடையார், ஆப்பநாட்டு மறவர் என 64 வகையான சாதிகளை உள்ளடக்கிய சீர் மரபினர் சமூகத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய இடஒதுக்கீடு வழங்காததை கண்டித்தும், தமிழக அரசு அண்மையில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு அறிவித்த இடஒதுக்கீடு அறிவிப்பின் மூலம் சமூக நீதி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விளாத்திகுளம் சத்யா நகர்,  மீரான்பாளையம் தெரு, தங்கம்மாள்புரம், மார்த்தாண்டம்பட்டி, கமலாபுரம், குருவார்பட்டி  என 50க்கும் மேற்பட்ட  கிராமங்களில் பசும்பொன் தேசிய கழக நிர்வாகி பரமசிவ தேவர், மறத்தமிழர் சேனை ஒன்றிய செயலாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் முக்குலத்தோர் சமுதாயத்தினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT