தமிழ்நாடு

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக கருப்புக்கொடி போராட்டம்

DIN

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் நாளான வியாழக்கிழமையும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் 93 சாதியினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆனால் ஒரே சாதியினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு இது சமூக அநீதி ஆகும் எனவே இதனைக் கண்டித்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் என மறவர் மகாசபை மறவர் நலக் கூட்டமைப்பு தேவர் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு வகையில் தமிழக அரசைக் கண்டித்து திருவில்லிபுத்தூர் மேட்டுத்தெரு, திருவண்ணாமலை, மங்காபுரம் ஆகிய பகுதியில் இரண்டாவது நாளாக கருப்புக்கொடி கட்டி தமிழக அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ காட்சிக்குச் சென்றுள்ள பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT