தமிழ்நாடு

வாழ எளிதான நகரங்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் சென்னை

4th Mar 2021 02:41 PM

ADVERTISEMENT


புது தில்லி: மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சகம், பொலிவுறு நகர திட்டங்களின் கீழ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்கள் வாழ எளிதான  நகரங்களின் பட்டியலில் சென்னை நான்காம் இடம் பிடித்துள்ளது.

பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட நகரங்களில் மத்திய அமைச்சகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், மக்கள் வாழ எளிதான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பெங்களூரு முதல் இடத்திலும், புணே இரண்டாம் இடத்திலும், ஆமதாபாத் மூன்றாம் இடத்திலும் சென்னை நான்காம் இடத்திலும், சூரத் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

இவை தவிர, தமிழகத்தில் கோவை (7) சேலம் (15), வேலூர் (16), திருச்சி (20) ஆகிய இடங்களில் உள்ளன.
 

ADVERTISEMENT

Tags : chennai cities
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT