தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா் அமைச்சர் வேலுமணி

4th Mar 2021 05:17 PM

ADVERTISEMENT

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் வேலுமணி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 
இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாா்ச் 1-இல் தொடங்கின. 
இந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT